முதல் பதிவு
வணக்கம்
புத்தகம் படிப்பது எனக்கு மிகவும் பிடித்தமானதொரு செயல். வளர்ந்தபின் நிறய புத்தகங்கள் வங்கி
படிக்க வேண்டும் என்று எண்ணம் என்னுள் இருந்தது. வேலைக்கு சென்ற பின் பல புத்தகங்களை
வாங்கினேன். படிக்க நேரமிஇல்லாததால் நாளடைவில் புத்தகங்கள் வாங்கும் பழக்கம் சிறிது
சிறிதாக மறைய தொடங்கியது. எப்போது நான் புத்தகங்கள் வாங்குவதை விட்டேனோ என்று
கூட நினைவு இல்லை. பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்து
இப்போது ஆறு ஆண்டுகள் ஆகின்றன. குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட
தமிழ் நாவல்களை இந்த ஆறு மாதங்களுக்குள் படித்துள்ளேன்.
தமிழில் வலைப்பதிவு செய்ய வேண்டும் என்று நெடுநாட்கள் எண்ணியும் செயல் படுத்தாமல்
இருந்தேன். அதன் காரணம் அதிகம் ஆங்கிலத்தயே வேலையில் பயன்படுத்துவது ஆகும்.
இப்படியே சென்ட்ரல் தாய்மொழியே மறந்து விடுமோ என்ற எண்ணம் கூட பல முறை தோன்றும்.
சிந்திக்க கூட நேரமிலாத வாழ்கையிலிருந்து விடுபட்டு இப்போது முழு நேரம் எனது
சிந்தனைகளுடன் வாழ்கிறேன்.
நான் படித்த புத்தகங்களை பற்றி வலைப்பதிவு செய்ய , விமர்சனம் செய்ய, பரிந்துரை செய்ய,
தகவலை பகிர இந்த தளத்தில் காணலாம்.
படித்தமைக்கு நன்றி. உங்கள் விருப்பங்களையோ கருத்துகளையோ தெரிவிக்கவும்.
கருத்துகள்
கருத்துரையிடுக