இடுகைகள்

புத்தக பரிந்துரை - வீர யுக நாகயன் வேள்பாரி

 வீர யுக நாகயன் வேள்பாரி  மிக பெரிய புத்தகம். இரண்டு தொகுதிகள் கொண்டது.  தமிழில் நான் படித்த மிக சிறந்த வரலாற்று புனைவு நூல். அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம். பறம்பு நாட்டை தெரிந்து கொள்ள ஏதுவான புத்தகம். நல்ல வரைபடங்களுடன் கதை சொல்வது சிறப்பு. மீண்டும் வேறு ஒரு புத்தக பரிந்துரையுடன் சந்திப்போம்.

புத்தக பரிந்துரை - நீலகண்ட பறவை தேடி

நீலகண்ட பறவை தேடி வங்காள மொழியில் எழுதபட்ட நூல். அதின் பந்தோபாத்யாய் அவர்களால் இயற்றப்பட்டு, சு. கிருஷ்ணமூர்த்தியால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட  நூல். நூறு ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதை கலம். இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் நடக்கும் கற்பனை கதை. சோனாலி பாலி ஆற்றின் கறை ஓரம் இருக்கும் கிராமங்களில் நடக்கும் கற்பனை சம்பவங்கள். கற்பனையை உண்மையாக்குவதுபோல் விவரிக்கும் எழுத்தோட்டம். அந்த கிராமங்களில் அக்காலத்தில் இருக்கும் வாழ்க்கை முறை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியது போல் இருந்தது இப்புத்தகத்தை  படித்து முடித்த பின். நான் வெகு வேகமாக தொடர்ந்து படித்த புத்தகம் இதுவாகதான் இருக்கும். பரிட்சைக்கு முந்தய நாள் படிப்பது போல் படித்தேன்.  புத்தகத்தின் முதற் பகுதியில் பல மரங்களின் பெயர்களை குறிப்பிடுகிறார் ஆசிரியர். பல பழங்களின் பெயரை நான் கேள்வி பட்டதில்லை. மரங்கலின் பெயர்களை நான் குறிப்பு எடுத்துக்கொண்டேன். மேலும் பல அறிய வேண்டியவை இந்த புத்தகத்தில் உள்ளது.  அருமையான மொழிபெயர்ப்பு நாவல். அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

புத்தக பரிந்துரை - கானகன்

படம்
  கானகன் காடுகளில் வாழும் பளியர் இன மக்களின் கதை . கருமாண்டிக்கும் வேட்டைகருணுக்கும் உள்ள  வித்யாசத்தை தெளிவு படுத்தும் கதை . காடுகள் விவசாய நிலமாக மாறுவது எப்படி என்று  சொல்லும் கதை . அனைத்து விலங்குகளுக்கும் காடு சொந்தமானது . மனிதன் மட்டுமே உரிமை  கொண்டாட கூடாது என்பதை வாழ்க்கை முறையாக வாழும் பளியர் என்னும் பழங்குடி மக்களின்  கதை . நல்ல சுவாரஸ்யமான கதை . விருவிறுவென தொடர்ந்து படிக்க முடிந்தது . ஆரம்பத்திலும் புலி  வீட்டை , முடிவிலும் புலி வேட்டை . ஆசிரியர் குறிப்பு லஷ்மி சரவணக்குமார் மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் . கடந்த பத்து ஆண்டுகளக்கு மேலாக சென்னைவாசி .  சிறுகதைகள் , நாவல்கள் , கவிதைகள் என வெவ்வேறு தளங்களில் தொடர்ந்து இயக்கி வருபவர் .  சாகித்ய அகாடெமியின் யுவபுரஸ்கார் விருது , சிறந்த நாவலுக்கான சுஜாதா விருது , இலக்கிய  சிந்தனை விருது , பா . சிங்காரம் நினைவு விருது என ஏராளமான விருதுகள் இவரது  படைபுகளுக்கு  வழங்கப்பட்டுள்ளன . ஊர் சுற்றுவதை பிரதானமான வேலையாக கொண்ட இவர் சில திரைப்படங்களின்  திரைக்கதையாசிரியராக பணியாற்றி வருக...

புத்தக பரிந்துரை - என்மகஜே

படம்
நூலின் பெயர் : என்மகஜெ ஆசிரியர் : அம்பிகாசுதான் மாங்காடு மொழிபெயர்த்தவர் : சிற்பி பாலசுப்பிரமணியம் இது கேரள மாநிலத்தில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதி . இங்கே நடந்த உண்மயான  சம்பவங்களை தழுவியே இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது . எண்டோசல்பன் இன்னும் பூச்சி  கொல்லி மருந்து பயன்பாட்டினால் ஏற்பட்ட பாதிப்புகளையும் அதன் பின் நடந்த   போராட்டங்களையும் நேரில் பார்த்து மற்றும் பங்கேற்ற இந்நூலின் ஆசிரியர் ஒரு கல்லூரி  பேராசிரியரும் கூட . இது மலையாள மொழியில் எழுதப்பட்ட நாவல் . இதனை எழுதியவர் அம்பிகாசுதான் மாங்காடு .   தம் என்மகஜெ சூழலியல் நாவலால் புகழ் பெற்ற அம்பிகாசுதான் மாங்காடு , கேரள மாநிலம்  காசர்கோடு மாவடத்தை சேர்ந்தவர் . காஞ்ஞங்காடு நேரு கல்லூரியில் மலையாள பேராசிரியர் .   காரூர் , இடசேரி , செறுகாடு , வி . டி . பட்டதிரிபாடு , மலையாற்றூர் விருதுகள் பலவும் வென்றவர் .   எட்டு சிறுகதை தொகுப்பகுளும் , என்மகஜெ , மரகாபிலே தெய்யங்கள் , என்ற இரண்டு  நாவல்களும் , பல திறனாய்வு நூல்களும் எழுதியவர் . 2009 இல் வெளிவந்த என்மகஜெ 2012 க்குள்  ஆறு பதிப்பு...

முதல் பதிவு

வணக்கம் புத்தகம் படிப்பது எனக்கு மிகவும் பிடித்தமானதொரு செயல் . வளர்ந்தபின் நிறய புத்தகங்கள் வங்கி  படிக்க வேண்டும் என்று எண்ணம் என்னுள் இருந்தது . வேலைக்கு சென்ற பின் பல புத்தகங்களை  வாங்கினேன் . படிக்க நேரமிஇல்லாததால் நாளடைவில் புத்தகங்கள் வாங்கும் பழக்கம் சிறிது  சிறிதாக மறைய தொடங்கியது . எப்போது நான் புத்தகங்கள் வாங்குவதை விட்டேனோ என்று  கூட நினைவு இல்லை . பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்து  இப்போ து ஆறு ஆண்டுகள் ஆகின்றன . குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் இருபதுக்கும் மேற்பட்ட  தமிழ்  நாவல்களை இந்த ஆறு மாதங்களுக்குள் படித்துள்ளேன் . தமிழில் வலைப்பதிவு செய்ய வேண்டும் என்று நெடுநாட்கள் எண்ணியும் செயல் படுத்தாமல்  இருந்தேன் . அதன் காரணம் அதிகம் ஆங்கிலத்தயே வேலையில் பயன்படுத்துவது ஆகும் .  இப்படியே சென்ட்ரல் தாய்மொழியே மறந்து விடுமோ என்ற எண்ணம் கூட பல முறை தோன்றும் .  சிந்திக்க கூட நேரமிலாத வாழ்கையிலிருந்து விடுபட்டு இப்போது முழு நேரம் எனது  சிந்தனைகளுடன் வாழ்கிறேன் . நான் படித்த புத்தகங்களை பற்றி வலைப்பதிவு ச...