புத்தக பரிந்துரை - கானகன்
கானகன் காடுகளில் வாழும் பளியர் இன மக்களின் கதை . கருமாண்டிக்கும் வேட்டைகருணுக்கும் உள்ள வித்யாசத்தை தெளிவு படுத்தும் கதை . காடுகள் விவசாய நிலமாக மாறுவது எப்படி என்று சொல்லும் கதை . அனைத்து விலங்குகளுக்கும் காடு சொந்தமானது . மனிதன் மட்டுமே உரிமை கொண்டாட கூடாது என்பதை வாழ்க்கை முறையாக வாழும் பளியர் என்னும் பழங்குடி மக்களின் கதை . நல்ல சுவாரஸ்யமான கதை . விருவிறுவென தொடர்ந்து படிக்க முடிந்தது . ஆரம்பத்திலும் புலி வீட்டை , முடிவிலும் புலி வேட்டை . ஆசிரியர் குறிப்பு லஷ்மி சரவணக்குமார் மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர் . கடந்த பத்து ஆண்டுகளக்கு மேலாக சென்னைவாசி . சிறுகதைகள் , நாவல்கள் , கவிதைகள் என வெவ்வேறு தளங்களில் தொடர்ந்து இயக்கி வருபவர் . சாகித்ய அகாடெமியின் யுவபுரஸ்கார் விருது , சிறந்த நாவலுக்கான சுஜாதா விருது , இலக்கிய சிந்தனை விருது , பா . சிங்காரம் நினைவு விருது என ஏராளமான விருதுகள் இவரது படைபுகளுக்கு வழங்கப்பட்டுள்ளன . ஊர் சுற்றுவதை பிரதானமான வேலையாக கொண்ட இவர் சில திரைப்படங்களின் திரைக்கதையாசிரியராக பணியாற்றி வருக...