புத்தக பரிந்துரை - கானகன்

 கானகன்



காடுகளில் வாழும் பளியர் இன மக்களின் கதை. கருமாண்டிக்கும் வேட்டைகருணுக்கும் உள்ள 

வித்யாசத்தை தெளிவு படுத்தும் கதை. காடுகள் விவசாய நிலமாக மாறுவது எப்படி என்று 

சொல்லும் கதை. அனைத்து விலங்குகளுக்கும் காடு சொந்தமானது. மனிதன் மட்டுமே உரிமை 

கொண்டாட கூடாது என்பதை வாழ்க்கை முறையாக வாழும் பளியர் என்னும் பழங்குடி மக்களின் 

கதை.


நல்ல சுவாரஸ்யமான கதை. விருவிறுவென தொடர்ந்து படிக்க முடிந்தது. ஆரம்பத்திலும் புலி 

வீட்டை, முடிவிலும் புலி வேட்டை.



ஆசிரியர் குறிப்பு

லஷ்மி சரவணக்குமார்


மதுரை திருமங்கலத்தை சேர்ந்தவர். கடந்த பத்து ஆண்டுகளக்கு மேலாக சென்னைவாசி

சிறுகதைகள், நாவல்கள், கவிதைகள் என வெவ்வேறு தளங்களில் தொடர்ந்து இயக்கி வருபவர்

சாகித்ய அகாடெமியின் யுவபுரஸ்கார் விருது, சிறந்த நாவலுக்கான சுஜாதா விருது, இலக்கிய 

சிந்தனை விருது, பா. சிங்காரம் நினைவு விருது என ஏராளமான விருதுகள் இவரது 

படைபுகளுக்கு 

வழங்கப்பட்டுள்ளன.



ஊர் சுற்றுவதை பிரதானமான வேலையாக கொண்ட இவர் சில திரைப்படங்களின் 

திரைக்கதையாசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் இயக்கிய மயானத் தங்கம் இன்னும் 

குறும்படம் நைரோபியில் நடந்த ஸ்லம் பிலிம் பெஸ்டிவலில் சிறப்பான கவனத்தை பெற்றதோடு 

லண்டன் திரைப்பட விழாவிலும் கவனம் பெற்றது. தனது முதல் படம் இய்யாகுவதற்கான 

வேலைகளில் தற்போது மும்முரமாக உள்ளார்.

கருத்துகள்