புத்தக பரிந்துரை - என்மகஜே
நூலின் பெயர் : என்மகஜெ
ஆசிரியர் : அம்பிகாசுதான் மாங்காடு
மொழிபெயர்த்தவர்: சிற்பி பாலசுப்பிரமணியம்
இது கேரள மாநிலத்தில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதி. இங்கே நடந்த உண்மயான
சம்பவங்களை தழுவியே இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. எண்டோசல்பன் இன்னும் பூச்சி
கொல்லி மருந்து பயன்பாட்டினால் ஏற்பட்ட பாதிப்புகளையும் அதன் பின் நடந்த
போராட்டங்களையும் நேரில் பார்த்து மற்றும் பங்கேற்ற இந்நூலின் ஆசிரியர் ஒரு கல்லூரி
பேராசிரியரும் கூட.
இது மலையாள மொழியில் எழுதப்பட்ட நாவல். இதனை எழுதியவர் அம்பிகாசுதான் மாங்காடு.
தம் என்மகஜெ சூழலியல் நாவலால் புகழ் பெற்ற அம்பிகாசுதான் மாங்காடு, கேரள மாநிலம்
காசர்கோடு மாவடத்தை சேர்ந்தவர். காஞ்ஞங்காடு நேரு கல்லூரியில் மலையாள பேராசிரியர்.
காரூர் , இடசேரி, செறுகாடு , வி.டி. பட்டதிரிபாடு , மலையாற்றூர் விருதுகள் பலவும் வென்றவர்.
எட்டு சிறுகதை தொகுப்பகுளும், என்மகஜெ, மரகாபிலே தெய்யங்கள், என்ற இரண்டு
நாவல்களும், பல திறனாய்வு நூல்களும் எழுதியவர். 2009இல் வெளிவந்த என்மகஜெ 2012க்குள்
ஆறு பதிப்புகளை கண்டுள்ளது.சூழலியல் சார் இயக்கங்களில் தீவிர பணியாளர் மாங்காடு.
இதனை அற்புதமாக தமிழில் மொழி பெயர்துள்ளார் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்கள்.
பாரதியார் பல்கலைக்கழக முன்னய தமிழ் துறை தலைவர். சாகித்ய அகாடமியின் தமிழ்
ஒருங்கிணைப்பாளர்(2008-2012). வானம்பாடி இயக்க மூலவர்களில் ஒருவர். சாகித்ய அகாடமி
மொழி பெயர்ப்பு விருது, படைப்பிலக்கிய விருது என இருமுறை விருதுகள் பெற்றவர்.
மலையாளத்திலிருந்து எம்.டி, ஓ.என்.வி. குறுப்பு, சச்சிதானந்தன், லலிதாம்பிகை
அந்தர்ஜனம், சங்கரப்பிள்ளை நூல்களை மொழி பெயர்த்தவர். தமிழக அரசின் பாவேந்தர் விருது,
கலைமாமணி விருதுகள் பெற்றவர்.
என் வீட்டின் அருகில் உள்ள அரசு நூலகத்தில் இந்நூல் பற்றி அறிந்து வாங்கி படித்தேன். அனைவரும் படிக்க வேண்டிய நூல்.
First edition : ஜூன் 2013
kavitha publication
post box no : 6123
8, masilamani street,
pondy bazaar
t nagar
chennai-600017
24364243
24322177
ISBN: 978-81-8345-336-3

கருத்துகள்
கருத்துரையிடுக